பப்புவா நியூ கினியாவில் மண்சரிவு: 100 பேர் பலி!

தெற்கு பசுபிக் தீவான பப்புவா நியூ கினியாவில் இன்று (24) ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

பப்புவா நியூ கினியாவின் வடமேற்கு பகுதியில் உள்ள எங்கா (Enga) மாகாணத்தின் காகாலம் ( Kaokalam) கிராமத்தில் இந்த நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

உள்ளூர் நேரப்படி அதிகாலை 3 மணியளவில் நிலச்சரிவு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நூற்றுக்கும் மேற்பட்டோர் மண்ணில் புதைந்துள்ளதாக கிராமவாசிகள் தெரிவித்துள்ளனர்.

எனினும், அதிகாரபூர்வ அறிவுப்புகள் இதுவரை வௌியாகவில்லை.

Related Articles

Latest Articles