பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குமாறு வலியுறுத்தி யாழில் கையெழுத்து வேட்டை!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கக் கோரி யாழ்ப்பாணத்தில் இன்று கையெழுத்துப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மக்கள் பேரவைக்கான இயக்கத்தின் ஏற்பாட்டில் யாழ். மத்திய பஸ் நிலையம் முன்பாக இதற்குரிய நடவடிக்கை இடம்பெற்றது.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை உடனடியாக நீக்க வேண்டும் எனக் கோரி மக்கள் பேரவைக்கான இயக்கத்தினர் நாடு முழுவதும் கையெழுத்துப் பெறுகின்ற போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

இதன் ஓர் அங்கமாகவே யாழ்ப்பாணத்திலும் கையெழுத்து வேட்டை நடத்தப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles