‘பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு எதிராக யாழில் கையெழுத்து வேட்டை’

பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திரட்டும் நடவடிக்கை இலங்கை தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணியின் ஏற்பாட்டில் இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.

யாழ்ப்பாணம் மத்திய பஸ் நிலையத்திற்கு முன்பாக இன்று காலை 9 மணியளவில் இதற்கான நடவடிக்கை ஆரம்பமானது.

இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா முதலாவதாக கையெழுத்திட்டு, கையெழுத்து வேட்டையை ஆரம்பித்து வைத்தார்.

அதேவேளை, பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி கொழும்பில் நேற்று கையொப்பம் திரட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles