எதிரணிகளையும், சிவில் அமைப்புகளையும் ஒன்றிணைத்து பொதுவேலைத்திட்டமொன்றை உருவாக்குவதற்கான பாலமாக செயற்படுவதற்கு நான் தயாராகவே இருக்கின்றேன் – என்று நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” நாட்டை மீட்பதற்கு தற்போது பொது வேலைத்திட்டமொன்று அவசியம். அதற்காக கட்சிகள், சிவில் அமைப்புகள், தொழில் வல்லுநர்கள், புத்திஜீவிகள் ஒன்றுபட வேண்டும். இந்த பொது திட்டத்தை ஏற்படுவதற்கான பாலமாக செயற்பட நான் தயார்.
ஏனெனில் தற்போதைய அரசு முறையாக செயற்படவில்லை, எனவே ,எதிரணிகள் ஒன்றிணைந்து பொதுத்திட்டமொன்றை உருவாக்காவிட்டால் மக்கள் மறுபடியும் வீதிக்கு இறங்குவதை தடுக்க முடியாது. நானும் நிச்சயம் வீதியில் இறங்குவேன்.
இந்த அரசால் இனியும் முடியாது. அதனால்தான் பொது வேலைத்திட்டமொன்றை உருவாக்குவதற்கு ஒன்றுபட வேண்டும். எனக்கு பதவி முக்கியம் அல்ல. இதற்காக என்னால் முடிந்த அனைத்து ஒத்துழைப்புகளையும் வழங்குவேன்.” – என்றார்.
