யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு உடுத்துறையை சேர்ந்த பெண் ஒருவரிடம் இரண்டு இலட்சம் ரூபா கொள்ளையிடப்பட்டுள்ளது.
குறித்த பெண்ணை தொடர்பு கொண்டு தனியார் தொலைபேசி வலையமைப்பு நிறுவனத்தின், சீட்டிழுப்பு மூலம் பணப்பரிசு கிடைத்திருப்பதாக கூறியே இக்கொள்ளை இடம்பெற்றுள்ளது.
பெண்ணின் வங்கி கணக்கு இலக்கம், தேசிய அடையாள அட்டை இலக்கம் மற்றும் வங்கி கணக்கில் உள்ள தொலைபேசி இலக்கம் என்பவற்றை பெற்று கடவுச்சொற்களையும், அவரின் அறியாமையை பயன்படுத்தி பெற்று அதன் மூலம் வங்கிக் கிளையின் செயலியில் உள்நுழைந்தே 2 லட்சம் ரூபா கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.










