கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை நடைபெறும் காலப்பகுதியில் “சிசு சரிய” பஸ் சேவையை தொடர்ந்து நடத்த தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் “சிசு சரிய” பஸ் சேவையானது பாடசாலை விடுமுறையுடன் நிறுத்தப்படும்.
இருப்பினும், சாதாரணதர பரீட்சை நடைபெறும் காலப்பகுதியில் தொடர்ச்சியாக பஸ் சேவையை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி நிலான் மிரண்டா தெரிவித்துள்ளார்.
