பழிதீர்க்கும் கோஷத்துடன் ஆயிரக்கணக்கானோர் அஞ்சலி!

படுகொலை செய்யப்பட்ட ஹமாஸ் அரசியல் பிரிவுத் தலைவர் இஸ்மைல் ஹனியேவின் இறுதிக் கிரியை பெரும் திரளானோரின் பங்கேற்புடன் ஈரான் தலைநகர் டெஹ்ரானில் நேற்று (01) இடம்பெற்றதோடு இந்தப் படுகொலை காசாவில் நீடிக்கும் போர் பிராந்திய அளவில் பரவும் அச்சுறுத்தலை அதிகாரித்துள்ளது.

ஈரான் தலைநகரில் வைத்து இஸ்ரேலால் நடத்தப்பட்ட தாக்குதலில் ஹனியே கொல்லப்பட்டதாக நம்பப்படும் நிலையில், அது ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே நேரடி போர் ஒன்றுக்கான அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. எனினும் இந்தப் படுகொலை தொடர்பில் இஸ்ரேல் தொடர்ந்து மௌனம் காத்து வருகிறது.

இந்நிலையில் ஈரான் மண்ணில் நடத்தப்பட்ட தாக்குலுக்கு பதிலடியாக இஸ்ரேலுக்கு எதிராக நேரடி தாக்குதலை நடத்த ஈரான் உயர்மட்டத் தலைவர் ஆயதொல்லா அலி கமனெய் உத்தரவிட்டதாக ஈரானிய அதிகாரிகளை மேற்கோள்காட்டி அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

டெஹ்ரான் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற இறுதிக் கிரியையில் உயர்மட்டத் தலைவர் முன்னின்று தொழுகை நடத்தினார். இதில் கறுப்பு நிற உடையுடன் பங்கேற்ற ஆயிரக்கணக்கான மக்கள் ‘இஸ்ரேல் ஒழிக’ மற்றும் ‘அமெரிக்கா ஒழிக’ என்று கோசம் எழுப்பினர்.

இறுதிக் கிரியையை அடுத்து அவரது உடல் காசாவில் இருந்து வெளியேறிய பின் அவர் பெரும்பாலான காலம் தங்கி இருக்கும் கட்டாருக்கு எடுத்துச் செல்லப்பட்டதோடு அங்கு இன்று நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

‘அபூ அல் அபெத் இஸ்மைல் ஹனியே, அமைதி கொள்ளுங்கள். சியோனிச ஆக்கிரமிப்பை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு எமது நாடு, ஈரான், எதிப்பாளர்கள், உங்களது மக்கள், உங்களது போராளிகள் ஒன்றுபட்டுள்ளனர்’ என்று ஹமாஸ் பிரதித் தலைவர் கலீல் அல் ஹய்யா, காசாவில் இருந்து தொலைக்காட்சி வழியாக இறுதிக் கிரியையில் உரையாற்றும்போது குறிப்பிட்டார்.

கடந்த புதன்கிழமை அதிகாலையில் தனது மெய்க்காவலர் ஒருவருடன் ஹனியே படுகொலை செய்யப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னர் லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் முன்னணி தளபதியான புவாத் ஷுக்ரி படுகொலை செய்யப்பட்டார்.

இந்த சம்பவங்கள் பிராந்தியத்தில் போர் பதற்றத்தை அதிகரிக்கச் செய்திருக்கும் சூழலில் ஐ.நா. பாதுகாப்புச் சபை நேற்று முன்தினம் அவசரமாகக் கூடியது.

மத்திய கிழக்கை போர் பள்ளத்திற்குள் இஸ்ரேல் இழுத்துச் செல்வதை சர்வதேச சமூக நிறுத்த வேண்டும் என்று பலஸ்தீன தூதுவர் வலியுறுத்தியதோடு சீனா, ரஷ்யா மற்றும் அல்ஜீரிய நாடுகள் ஹனியேவின் படுகொலையை கண்டித்தன. பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மையை நிலைகுலைப்பதற்கு ஈரான் ஆதரவு அளிப்பதாக அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் நாடுகள் குற்றம்சாட்டியதோடு மத்திய கிழக்கில் முழு அளவில் போர் வெடிக்கும் அச்சம் பற்றி ஜப்பான் கவலை வெளியிட்டது.

பதற்றத்தைத் தணிக்கும் முயற்சியாக காசா போர் நிறுத்தத்திற்கு வலியுறுத்தப்பட்டு வருகிறது. டெஹ்ரான் மற்றும் பெய்ரூட் தாக்குதல் ‘ஆபத்தான வகையில் மோதலை அதிகரிக்கச் செய்யும்’ என்று ஐக்கிய நாடுகள் சபை செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டரஸ் தெரிவித்துள்ளார்.

காசாவில் போர் நிறுத்தம் ஒன்றை எட்டி காசாவில் பிடித்து வைக்கப்பட்டிருக்கும் பணயக்கைதிகளை விடுவிப்பதை நோக்கி அனைத்து முயற்சிகளும் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles