மெதமுலன வீடு கொழும்பில் உள்ள விஜயராம மாவத்தை வீட்டை விட மிகச் சிறந்தது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட சலுகைகளை தற்போதைய அரசாங்கம் நீக்க முயற்சிக்கும் நிலையில், இதுகுறித்து எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே மஹிந்த இவ்வாறு கூறினார்.
வரப்பிரசாதங்களை நீக்குவது தனக்கு பிரச்சினையல்ல என்றும், தனக்கு கிடைத்த சலுகைகள் மக்களிடமிருந்து பெற்றவையே என்றும், அதற்கு அப்பால் எதுவும் முக்கியமல்ல என்றும் மஹிந்த குறிப்பிட்டார்.
மக்களின் நேசம் எங்களுடன் இருக்கும் வரை, அவர்கள் எந்த சலுகைகளை நீக்கினாலும் பரவாயில்லை. இந்த நடவடிக்கையை அரசாங்கம் அரசியல் பழிவாங்கல் நோக்கில் மேற்கொள்கிறது என்றும் மஹிந்த ராஜபக்ச குற்றஞ்சாட்டினார்.










