பவதாரிணியின் பூதவுடல் அவரது சொந்த ஊரில் இன்று நல்லடக்கம்…!

இசைஞானி இளையராஜாவின் மகளும், பின்னணி பாடகியுமான பவதாரிணியின் உடல் இன்று சனிக்கிழமை (27) தேனி மாவட்டம் லோயர்கேம்ப்பில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

பிரபல திரைப்பட இசையமைப்பாளர் இளையராஜாவின் மகள் பவதாரணி (47) உடல் நலக்குறைவால் இலங்கையில் உள்ள ஒரு மருத்துவமனையில் காலமானார். இவரது உடல் வெள்ளிக்கிழமை சென்னையில் உள்ள இளையராஜாவின் வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

இதன்பிறகு, அங்கிருந்து அவசர ஊர்தி மூலம் தேனி மாவட்டம், லோயர்கேம்ப்பில் உள்ள முல்லைப் பெரியாற்றங்கரையில் குருவனூத்து பாலம் அருகே இளையராஜா கட்டியுள்ள குருகிருபா வேதபாடசாலை ஆசிரமத்துக்கு கொண்டு செல்லப்பட்டு இறுதி அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது.

பின்னர், பவதாரணியின் உடல் அடக்கம் அவரது தாய் ஜீவாவின் சமாதி அருகே இன்று நடைபெறுகிறது. ஏற்கெனவே இளையராஜாவின் தாய் சின்னத்தாயின் சமாதியும் இங்குள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles