பஸில் ராஜபக்சவை பாதுகாக்க முற்பட்டவர்களே அரசியலமைப்பிற்கான 22 ஆவது திருத்தச்சட்டமூலத்தை எதிர்க்கின்றனர் – என்று விமல் வீரசன்ச தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
” 22 ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பில் முழுமையாக திருப்திகொள்ள முடியாவிட்டாலும், அதில் ஏற்றுக்கொள்ளக்கூடிய சில விடயங்களும் உள்ளன. எனவே, அதனை ஆதரிக்க வேண்டும். எனினும், பஸிலை ஆதரிக்க நினைப்பவர்களே 22 ஐ எதிர்க்கின்றனர்.” – என்றும் விமல் குறிப்பிட்டார்.
அதேவேளை, ஜனாதிபதியின் தேவைக்கேற்பவே 22 முன்வைக்கப்பட்டுள்ளது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் குறிப்பிட்டார்.










