ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் என்பவற்றிலிருந்து 25 வீத வரியை அறவிட நிதியமைச்சு எடுத்துள்ள தீர்மானம் தொடர்பில் நாளை மறுதினம் நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் விரிவாக ஆராயப்படவுள்ளது.
இதன்போது நிதி அமைச்சரின் இந்த முடிவுக்கு கடும் எதிர்ப்பை வெளியிட அமைச்சர்களான வாசுதேவ நாணயக்கார, மகிந்த அமரவீர, விமல் வீரவங்ச, உதய கம்மன்பில ஆகியோர் தீர்மானித்துள்ளனர்.
அத்துடன், தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டிசில்வா, சுற்றாடல் துறை அமைச்சர் மஹிந்த அமரவீர ஆகியோரும் எதிர்ப்பை வெளியிடவுள்ளனர்.
இதனால் அமைச்சரவையில் சூடான வாதப்பிரதிவாதங்கள் இடம்பெறக்கூடும் என சிங்கள வார இதழொன்று செய்தி வெளியிட்டுள்ளது.










