பஸில் அல்ல எந்த கொம்பன் வந்தாலும் ராஜபக்சக்களுக்கு அரசியலில் இனி இடமில்லை….!

பஸில் ராஜபக்ச அல்ல எந்த கொம்பன் வந்தாலும் இலங்கை அரசியலில் ராஜபக்சவினால் இனி எதையும் செய்ய முடியாது – என்று தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் இரத்தினபுரி மாவட்ட மகளின் அமைப்பின் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

“தேர்தல் நடக்குமா என்ற சந்தேகம் வேண்டாம், இவ்வருடம் ஒக்டோபர் மாதம் வரும்போது இலங்கையில் புதிய அரசொன்றே ஆட்சியில் இருக்கும்.

பஸில் ராஜபக்ச அமெரிக்காவில் இருந்து வருகிறாராம், அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளாராம், 5 ஆம் திகதி அவர் வந்த பின்னர் நாடாளுமன்றம் கலைக்கப்படுமாம். இற்றைக்கு ஒன்றரை வருடத்துக்கு முன்னர் விமான நிலையத்தில் இந்த பக்கம் இருந்து அந்த போகமுடியாமல் தவித்தவர்தான் பஸில். அவர்களால் இலங்கை அரசியலில் மீண்டும் ஒன்றும் செய்ய முடியாது.

அண்ணன் ஜனாதிபதியாக இருந்தபோது, மற்றுமொரு அண்ணன் அமைச்சராக இருந்தபோது, மற்றுமொரு சகோதரர் பாதுகாப்பு செயலாளராக இருந்தபோது, மகன்மார் அமைச்சராக இருந்தபோது போட்ட ஆட்டத்தை இனி போடமுடியாது.

வெள்ளத்தில் மிதந்துவரும் கட்டையொன்றை கண்டதும் கீரியும், பாம்பும் அதில் ஏறும். ஆனால் வெள்ளம் இல்லாத சூழ்நிலையாக இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும்? தற்போது தேசிய மக்கள் சக்திக்கு மக்கள் அலைவீசுகின்றது. அந்த அலைக்கு ஈடுகொடுக்க முடியாமல் ரணில் – மஹிந்த – மைத்திரி -சந்திரிக்கா எல்லாம் ஒன்றாக இணைந்துள்ளனர்.” -என்றார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles