பொதுப்போக்குவரத்து பஸ்களில் பயணம் செய்யும் நபர்களிடமிருந்து பணப் பை மற்றும் தங்க ஆபரணங்கள் உள்ளிட்ட சொத்து திருட்டில் ஈடுபட்டு வந்த மூன்று பெண்களை ஒரு இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான போதைப் பொருட்களுடனும் இரண்டு இலட்சம் பெறுமதியான தங்க நகைகளுடனும் அநுராதபுரம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட மூவரும் கர்ப்பிணிப் பெண்களாவர்.
இவர்கள் தம்புத்தேகம, குடாகம மற்றும் இங்கிரிய பகுதிகளைச் சேர்ந்த 20 -30 வயதுடையவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
