பஸ்களுக்கான முற்கொடுப்பனவு அட்டை முறை அறிமுகம்?

போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தனவினால் பொதுமக்களின் நலன் கருதி பஸ்களுக்கான புதிய முற்கொடுப்பனவு அட்டை முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைய தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் காலி வரை பயணிக்கும் பஸ்களுக்காக கொட்டாவ-மகும்புர மல்டிமோடல் பகுதியில் முன்பணம் செலுத்தப்பட்ட பஸ் அட்டை முறை அறிமுகப்படுத்தப்பட்டது.

பொதுமக்கள் தங்கள் பயணத்திற்குத் தேவையான தொகையை முன்கூட்டியே செலுத்தி பஸ் அட்டையை பயன்படுத்த முடியும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

மேலும் தற்பொழுது பேருந்து அட்டை மக்கள் வங்கியில் கீழ் மட்டுமே விநியோகிக்கப்படுகின்றது எனவும் அவர் தெரிவித்தார்.

பொதுப் போக்குவரத்தில் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வாக எதிர்வரும் காலங்களில் இந்த முறையை நாடளாவிய ரீதியில் இத் திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

Related Articles

Latest Articles