பஸ்ஸில் ஏற முற்பட்டவர் கீழே விழுந்து உயிரிழப்பு – புஸல்லாவையில் சோகம்!

புஸ்ஸல்லாவை பஸ் தரிப்பு நிலையத்தில் இன்று மதியம் வயோதிபர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

பஸ்ஸில் ஏறுவதற்கு முற்பட்ட வேளையில் அவர் திடீரென கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் சுகவீனமுற்று இருந்த நிலையில், தனியார் மருத்துவசாலையில் மருந்துப் பொருட்களைக் கொள்வனவு செய்து, வீடு திரும்புவதற்காக பஸ்ஸில் ஏற முற்பட்டபோதே கீழே விழுந்துள்ளார்.

புஸ்ஸல்லாவை – ஹெல்பொட தோட்டப் பகுதியைச் சேர்ந்த 75 வயது வயோதிபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

Related Articles

Latest Articles