பஸ் கட்டணத்தை 10 வீதத்தால் அதிகரிக்குமாறு கோரிக்கை!

ஒட்டோ டீசல் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதால் பஸ் கட்டணத்தை 10 வீதத்தால் அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு போக்குவரத்து அமைச்சரிடம் தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அத்துடன், ஆரம்பக்கட்டணத்தை 30 ரூபாவில் இருந்து 34 ரூபாவரை அதிகரிக்குமாறும் கோரியுள்ளனர்.

எதிர்வரும் 15 ஆம் திகதிக்குள் இது தொடர்பில் முடிவெடுக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அதேவேளை, பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்து சேவை கட்டணமும் அதிகரிக்கப்படவுள்ளது. எனினும், ஆட்டோ கட்டணங்களில் மாற்றம் வராது என ஆட்டோ ஓட்டுநர் சங்கத்தினர் தெரிவித்தனர்.

 

Related Articles

Latest Articles