நாட்டில் தற்போது நிலவும் நெருக்கடி நிலை காரணமாக குறைந்தபட்ச பஸ் கட்டணம் 40 ரூபாவாக அதிகரிக்கப்படும் அபாயம் உள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அமைச்சர்களை மாற்றுவதன் மூலம் நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளுக்கு தீர்வு காண முடியாது என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அமைச்சரவையின் ராஜினாமா மற்றும் 41 ஆளும் தரப்பு எம்.பி.க்கள் பாராளுமன்றத்தில் சுயாதீனமாக இருக்க முடிவு செய்ததைத் தொடர்ந்து இன்றைய தினம் புதிய அமைச்சரவை நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது