எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டிருந்தாலும் பஸ் கட்டணம் ஒரு ரூபாவினால்கூட அதிகரிக்கப்படமாட்டாது – என்று போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அனுமுகம தெரிவித்தார்.
கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்துவதற்காக இருக்கைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப பயணிகளை ஏற்றிச் செல்ல வேண்டும் என்ற நிபந்தனை கடந்த காலத்தில் விதிக்கப்பட்ட போது, பேருந்து கட்டணத்தில் 20 வீத திருத்தம் மேற்கொள்ளப்பட்டமையால் இந்த தடவை கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய அவசியமில்லை எனவும் இராஜாங்க அமைச்சர் கூறினார்.
எனினும், எரிபொருட்களின் விலை அதிகரிப்பு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பஸ் உரிமையாளர்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பில் ஆராயப்படும் எனவும் திலும் குறிப்பிட்டார்.










