நாட்டில் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பஸ் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது.
இதன்படி, பஸ் கட்டணங்கள் 4.24 சதவீதத்தால் குறைக்கப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அத்துடன்,ஆரம்பக்கட்ட பஸ் கட்டணமாக 27 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் விலை குறைந்துள்ள நிலையிலேயே பஸ் கட்டணமும் குறைக்கப்பட்டுள்ளது.