பஸ் விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 10 ஆக உயர்வு – 41 பேர் காயம்

70 பயணிகளுடன் மட்டக்களப்பு – காத்தான்குடி நோக்கி வந்த பஸ் ஆற்றில் வீழ்ந்ததில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். 41 பேர் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

நேற்றிரவு 7.40 மணியளவில் முன்னதாக பொலனறுவை – மன்னம்பிட்டி பாலத்தில் இந்த விபத்து இடம்பெற்றது.

பொலனறுவை – கதுரவெல நகரத்தில் இருந்து மட்டக்களப்பின் காத்தான்குடி நகரத்துக்குப் போக்குவரத்துச் சேவையில் ஈடுபட்ட பஸ்ஸே இவ்வாறு விபத்துக்குள்ளானது. சிறுவர்கள், குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் என 70 பேர் இந்த பஸ்ஸில் பயணித்தனர்.

வேகக் கட்டுப்பாட்டை இழந்த பஸ் பாலத்தை விட்டு விலகி ஆற்றில் பாய்ந்தது. இதில் 10 பேர் உயிரிழந்தனர். 41 பேர் மீட்கப்பட்டனர்.

பொலிஸாரும் அப்பகுதி மக்களும் இணைந்து மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். நீண்ட நேரப் போராட்டத்தின் பின்னர் இரவு 11 மணியளவில் மீட்பு நடவடிக்கைகள் நிறைவுக்கு வந்தன.

காணாமல்போன பலர் மீட்கப்பட்டதுடன், ஆற்றில் பாய்ந்த பஸ்ஸும் மீட்கப்பட்டது.

இந்த விபத்து தொடர்பில் மன்னம்பிட்டி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related Articles

Latest Articles