பஸ் விபத்தில் 45 பேர் பலி: தென்னாபிரிக்காவில் சோகம்!

தென்னாபிரிக்கா Limpopo மாகாணத்தில் 165 அடி பள்ளத்தில் வீழ்ந்து பஸ்ஸொன்று விபத்துக்குள்ளானதில் 45 பேர் பலியாகியுள்ளார்.

பஸ்ஸில் பயணித்தவர்களில் 8 வயது சிறுமியொருவர் மட்டுமே படுகாயம் அடைந்த நிலையில் மீட்கப்பட்டு வைத்தியிசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

தென்னாப்பிரிக்காவின் வடக்கு மாகாணமான லிம்போபோவில் உள்ள மோரியா என்ற நகரத்திற்கு, ஈஸ்டர் திருநாள் கொண்டாட்டத்திற்காக பயணிகளுடன் சென்ற பஸ் ஒன்று மாமட்லகலாவில் உள்ள பாலத்தை கடக்கும் போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் பயணித்த 45 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அதிர்ஷ்டவசமாக 8 வயது சிறுமி மட்டும் படுகாயங்களுடன் உயிரிடன் மீட்க்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முதற்கட்ட விசாரணையில், போட்ஸ்வானாவில் இருந்து லிம்போபோவில் உள்ள மோரியா என்ற நகரத்திற்கு, ஈஸ்டர் திருநாள் கொண்டாட்டத்திற்காக அந்த பஸ் பயணிகளை ஏற்றிச் சென்றது தெரிய வந்துள்ளது.

தென்னாப்ரிக்கா நாட்டின் மிகப்பெரிய தேவாலயங்களில் ஒன்றான சியோன் கிறிஸ்டியன் சர்ச்சின் தலைமையகமான மோரியாவிற்கு, அவர்கள் புனிதப் பயணம் மேற்கொண்டதாக தெரிகிறது. விபத்தில் பஸ் முற்றிலும் எரிந்து நாசமானதில், அதில் இருந்த பலரது உடல்கள் அடையாளம் காண முடியாத அளவிற்கு கருகிப்போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பலரது உடல்கள் பஸ்சின் அடிப்புறத்தில் சிக்கியுள்ளன. அவற்றை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

Related Articles

Latest Articles