வெல்லவாய – தனமல்வில பிரதான வீதியில் வெல்லவாய குமாரதாச சந்தியில் இன்று புதன்கிழமை (21) காலை பஸ்ஸொன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் 7 பாடசாலை மாணவர்கள் உட்பட 15 பேர் காயம் அடைந்துள்ளனர்.
பஸ் சாரதி உட்பட காயமடைந்த 15 பேரும் வெள்ளவாய ஆரம்ப வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பில் வெல்லவாய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.










