பாகிஸ்தானின் சியால்கோட் பகுதியில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் பொது முகாமையாளராக பணிபுரியும் பிரியந்த குமார என்ற இலங்கையர் கொலை செய்யப்பட்டுள்ளமை கண்டனத்துக்குரியது என இ.தொ.காவின் உப தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது,
இலங்கையில் இருந்து வேலைக்காக பாகிஸ்தானுக்கு சென்ற இலங்கையர் கொள்ளப்பட்டமையானது கண்டனத்துக்குறியது என்றும், இச்சம்பவம் தொடர்பில் பாகிஸ்தான் அரசு உடனடியாக பொறுப்பு கூற வேண்டும் என்றும், இவ்வாறான காட்டுமிராண்டி தனமான செயலில் ஈடுபட்டவர்களின் மீது பாகிஸ்தான் அரசு உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுடன், தண்டனை வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு பாகிஸ்தான் அரசு உதவி வழங்க வேண்டும் எனவும் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.