” பாகிஸ்தானில் நடந்த கொடூரம் இலங்கையிலும் நடந்துள்ளது” – சாணக்கியன் (காணொளி)

” பாகிஸ்தானில் நடந்ததுபோல இலங்கையிலும் பல சம்பவங்கள் நடந்துள்ளன. அதுவும் அரச அனுசரணையில்கூட இடம்பெற்றுள்ளன.”  – என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” பாகிஸ்தானில் இலங்கையர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். இச்சம்பவத்தை நாம் கண்டிக்கின்றோம். தோழர் பிரியந்தகுமாரவின் குடும்பத்தாருக்கு அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

பாகிஸ்தானில் நடந்த சம்பவத்தை இலங்கையிலுள்ள இளைஞர்கள் கண்டிக்கின்றனர். அனுதாபம் தெரிவிக்கின்றனர். இலங்கையிலும் இப்படியான பல சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

56,58 காலப்பகுதியில் அரச அனுசரணையுடன் தமிழர்கள்மீதுதாக்குதல்கள் இடம்பெற்றன. தமிழ் இளைஞர்கள் கொல்லப்பட்டனர். கறுப்பு ஜுலையின்போதும் தமிழ் இளைஞர்கள் கொடூரமாகக் கொல்லப்பட்டனர். அவை தொடர்பான படங்களும் உள்ளன. ” – என்றார்.

” இலங்கையில் நடைபெற்ற சம்பவங்களையும், பாகிஸ்தான் சம்பவத்தையும் தொடர்புபடுத்த வேண்டாம். அதற்காக இங்கு நடந்தவை சரியென சொல்லவில்லை. அரசியல் காரணங்களாலும், அங்கு புலிகள் இராணுவத்தை கொன்றதாலும் மக்கள் மத்தியில் ஏற்பட்ட கொதிப்பால் நடந்தவை. எனவே, அநீதியான முறையில் கருத்துகளை முன்வைக்க வேண்டாம்.” – என்றார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles