தமிழ் மற்றும் சிங்கள மொழி மூல அரச மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளின் முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம் இன்று(24) ஆரம்பமானது.
கடந்த 10ஆம் திகதி விடுமுறை வழங்கப்பட்டிருந்தது.
இதனிடையே, பாடசாலைகளுக்கு எதிர்வரும் 3ஆம் திகதி முதல் 19 ஆம் திகதி வரை மீண்டும் விடுமுறை வழங்கப்படவுள்ளது.
இந்த காலப்பகுதிக்குள் 2023ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
மே 6 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதிவரை சாதாரணதரப்பரீட்சை நடைபெறும் எனவும், 4 லட்சத்து 52 ஆயிரத்து 979 பரீட்சாத்திகள் பரீட்சைக்கு தோற்றவுள்ளனர் எனவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
பாடசாலைகளில் இருந்து 3 லட்சத்து 87 ஆயிரத்து 648 விண்ணப்பங்களும், தனியாரிடமிருந்து 65 ஆயிரத்து 331 விண்ணப்பங்களும் கிடைக்கப்பெற்றுள்ளன. 3 ஆயிரத்து 521 பரீட்சை நிலையங்களில் பரீட்சை நடைபெறும்.










