புசல்லாவ இந்து தேசிய கல்லூரிக்கு முன்பாக பலவந்தமான முறையில் அமைக்கப்பட்டிருந்த கடை இன்று அகற்றப்பட்டது.
வீதி அதிபிவிருத்தி அதிகார சபையினரும், புசல்லாவை பொலிஸாரும் இணைந்து இதற்கான ஏற்பாடுகளை செய்தனர்.
தனிநபரால் பலவந்தமாக ஆக்கிரமிக்கப்பட்டிருந்த குறித்த காணி தற்போது பாடசாலை பாவனைக்கு வழங்கப்பட்டுள்ளதுடன், தேவையேற்படும்போது அதனை வீதி அபிவிருத்தி அதிகாரசபை பொறுப்பேற்பதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டது.
பாடசாலை வளவை பாதுகாப்பதற்கு உரிய நடவடிக்கையை எடுத்த கல்லூரி முதல்வர், பழைய மாணவர் சங்கத்தினர், அபிவிருத்திக்குழு உறுப்பினர்கள், புசல்லாவ பொலிஸார் மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபையினருக்கு பெற்றோரும், மாணவர்களும் நன்றிகளை தெரிவித்துள்ளனர்.










