பாடசாலை சீருடைகள் – பாடப்புத்தகங்கள் நாளை விநியோகம்

இரண்டாம் கட்ட பாடசாலை சீருடைகள் நாளை(23) விநியோகிக்கப்படவுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

அதனடிப்படையில், ஏப்ரல் விடுமுறைக்கு முன்னர் 4.1 மில்லியன் பாடசாலை மாணவர்கள் மற்றும் பிக்கு மாணவர்களுக்கு சீருடைகள் விநியோகிக்கப்படவுள்ளன.

முதல் கட்டத்தில் சீன அரசாங்கத்தால் வழங்கப்பட்ட சீருடைகள் 70 வீதமான மாணவர்களுக்கு விநியோகிக்கப்பட்டிருந்தன.

இதேவேளை, பாடசாலை பாடப்புத்தக விநியோகம் நாளை(23) முதல் ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

Related Articles

Latest Articles