பாணின் விலை அதிகரிப்பு

கோதுமை மாவின் விலை அதிகரிப்புக்கு ஏற்ப இன்று (19) நள்ளிரவு முதல் பேக்கரி பொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் 450 கிராம் பாண் ஒன்றின் விலை 30 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அத்தோடு ஏனைய பேக்கரி உற்பத்திகளின் விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்த சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

Related Articles

Latest Articles