பாண் விற்கும் போர்வையில் கஞ்சா கலந்த மதன மோதக மாத்திரைகள் விற்றவர் நோட்டன் பிரிட்ஜ் பொலிஸாரால் கைது!

பேக்கரி பொருள் விற்பனை என்ற போர்வையில் கஞ்சா கலந்த மதனமோதக போதைப்பொருளை விற்பனை செய்தார் எனக் கூறப்படும் சந்தேக நபர், நோட்டன் பிரிட்ஜ் பொலிஸாரால் இன்று (16) கைது செய்யப்பட்டுள்ளார்.

56 வயது நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

லொறியொன்றில் பேக்கரி பொருள் விற்பனை என்ற போர்வையில் கஞ்சா கலந்த மதனமோதக போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவதாக புலனாய்வு பிரிவுக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதற்கமைய நோட்டன் பிரிட்ஜ் ஊடாக குறித்த லொறி ஹட்டன் நோக்கி
பயணித்துக்கொண்டிருக்கையில் அதனை பொலிஸார் பரிசோதனைக்குட்படுத்தினர்.

இதன்போது லொறிக்குள் இருந்து 250 மதனமோதக உருண்டைகள் கைப்பற்றப்பட்டன.
சந்தேக நபரை நீதிமன்றத்தில் இன்று முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

ஆதித்யா

Related Articles

Latest Articles