பாதீட்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் ஜனவரி 9 சபையில் சமர்ப்பிப்பு

2025ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்துக்கான ஒதுக்கீட்டு சட்டமூலத்தை 2025 ஜனவரி 9 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் முன்வைப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் ஜனவரி மாதம் 9ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என அமைச்சரவைப் பேச்சாளர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

இதேவேளை அதன் இரண்டாம் வாசிப்பு பெப்ரவரி 17ஆம் திகதியும் மூன்றாம் வாசிப்பு மீதான விவாதம் பெப்ரவரி 27ஆம் திகதி முதல் மார்ச் 21ஆம் திகதி வரையிலும் நடைபெறவுள்ளது.

மக்கள் அரசின் மீது வைத்துள்ள நம்பிக்கையை உறுதிப்படுத்தும் வகையிலும், பொதுமக்களின் எதிர்பார்ப்புக்கள் நிறைவேறுகின்ற வகையில் அபிவிருத்தியின் ஆரம்பப் படிமுறைகளை மேற்கொள்வதற்கான வரவு செலவுத் திட்டமாக 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தைத் தயாரிப்பதற்குப் புதிய அரசு எதிர்பார்க்கின்றது.

அதற்கிணங்க, 2024 ஆம் ஆண்டின் 44 ஆம் இலக்க பகிரங்க நிதிசார் முகாமைத்துவச் சட்டத்தின் மூலம் குறிப்பிடப்பட்டுள்ள செலவீன மட்டுப்பாடுகளுக்கிணங்க, அரச கொள்கை வரைபுக்கமைய, அமைச்சின் விடயதானங்களின் கீழ் அந்தந்த அமைச்சுக்களால் அடையாளங் காணப்பட்டுள்ள கருத்திட்டங்கள் மற்றும் வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான நிதியொதுக்கீடுகளை மேற்கொள்வதற்கு இயலுமாகும் வகையில் அனைத்து அமைச்சுக்களிலிருந்தும் முன்மொழிவுகளைப் பெற்றுக் கொள்வதற்கும், 2025 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் 2025.01.09 அன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.

பின்னர் இரண்டாம் வாசிப்பு (வரவு செலவுத்திட்ட விவாதம்) 2025.02.17 அன்று நடத்துவதற்கும், மூன்றாம் வாசிப்புக்கான வரவு செலவுத்திட்ட விவாதத்தை 2025.02.27 அன்று தொடக்கம் 2025.03.21 அன்று வரை நடத்துவதற்கு இயலுமாகும் வகையில் 2025 ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தைத் தயாரிப்பதற்காக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles