பாதீட்டுக்கு எதிராக வாக்களிக்க முற்போக்கு கூட்டணி முடிவு! தமிழ்த் தேசியக் கட்சிகளும் எதிர்ப்பு!!

வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ள நிலையில், தமிழ்த் தேசியக் கட்சிகள் எதிராக வாக்களிக்கத் தீர்மானித்துள்ளன என்று அறியமுடி கின்றது.

2024ஆம் நிதியாண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தை நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த 13ஆம் திகதி
நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்திருந்தார். மறுநாள் 14ஆம் திகதி தொடக்கம் இரண்டாம் வாசிப்பு விவாதம் இடம்பெற்று வருகின்ற நிலையில் இன்று மாலை அதன் மீதான வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.

இந்த வாக்கெடுப்பில் ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுடன் இணைந்து இலங்கைத் தமிழரசுக் கட்சி, ரெலோ, புளொட் மற்றும் தமிழ்த் தேசிய
மக்கள் முன்னணி என்பன எதிர்த்து வாக்களிக்கும் என எதிர்பார்க்கப்படும் அதேநேரம் தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் வாக்கெடுப்பில் பங்கேற்கமாட்டார் எனத் தெரிய
வருகின்றது.

அதேவேளை, தமிழ் முற்போக்கு கூட்டணி எதிராக வாக்களிக்கவுள்ளது. இதொகா ஆதரவளிக்க உள்ளது.

Related Articles

Latest Articles