வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவு வழங்கப்படும் என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார் .
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் விசேட கூட்டமொன்று கட்சியின் தலைவர் மஹிந்த ராஜபக்ச, ஸ்தாபகர் பஸில் ராஜபக்ச ஆகியோர் தலைமையில் மொட்டு கட்சி தலைமையகத்தில் நேற்று நடைபெற்றது.
2024 ஆம் நிதியாண்டுக்கான பாதீடு, கட்சியின் சம்மேளனம் தொடர்பில் இதன்போது விரிவாக ஆராயப்பட்டுள்ளன.
கூட்டத்தின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட மஹிந்தானந்த அளுத்கமகே கூறியவை வருமாறு,
” எமது கட்சி அரசை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சியாகும். எனவே, பாதீட்டுக்கு ஆதரவு வழங்கப்படும். நாமல் ராஜபக்சவுக்கு மாறுபட்ட கருத்து இருக்கலாம். கடந்த வருடம் இந்த நாடு இருந்ததை மறந்துவிடக்கூடாது. வரிசை யுகம் ஏற்பட்டது. மக்களுக்கு உண்ண இருக்கவில்லை. இவ்வாறானதொரு சூழ்நிலையில் சாதகமான பாதீடு முன்வைக்கப்பட்டுள்ளது. அதில் உள்ள யோசனைகள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.” – என்றார்.
