பாம்புக் குட்டிகளை பந்தாடுமா இலங்கை அணி?

ஆசிய கிண்ண டி20 கிரிக்​கெட் தொடரின் சூப்​பர் 4 சுற்​றில் இன்று இரவு துபா​யில் நடை​பெறும் ஆட்​டத்​தில் இலங்கை – வங்​கதேசம் அணி​கள் மோதுகின்​றன.

ஐக்​கிய அரபு அமீரகத்​தில் நடை​பெற்று வரும் இந்​தத் தொடரில் 8 அணி​கள் கலந்து கொண்​டுள்​ளன.

லீக் சுற்​றின் முடி​வில் ‘ஏ’ பிரி​வில் இருந்து இந்​தி​யா, பாகிஸ்​தான் அணி​களும் ‘பி’ பிரி​வில் இருந்து இலங்​கை, வங்​கதேசம் அணி​களும் சூப்​பர் 4 சுற்​றுக்கு முன்​னேறின.

சூப்​பர் 4 சுற்று இன்று தொடங்​கு​கிறது. இதன் முதல் ஆட்​டத்​தில் இலங்கை – வங்​கதேசம் அணி​கள் இரவு 8 மணிக்கு துபா​யில் மோதுகின்​றன.

சரித் அசலங்க தலை​மையி​லான இலங்கை அணி லீக் சுற்​றில் 3 ஆட்​டங்​களி​லும் வெற்றி பெற்​றது தனது பிரி​வில் முதலிடம் பிடித்து இருந்​தது. வங்​கதேச அணியை 6 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தி​லும், ஹாங் காங் அணியை 4 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தி​லும், ஆப்​கானிஸ்​தான் அணியை 6 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தி​லும் தோற்​கடித்து இருந்​தது.

இலங்கை அணி 3 ஆட்​டங்​களி​லுமே இலக்கை துரத்​தியே வெற்றி கண்​டுள்​ளது. இதனால் நாணயச்சுழற்சியில் வெல்​லும் பட்​சத்​தில் பந்து வீச்சை தேர்வு செய்ய அதிக வாய்ப்பு உள்​ளது. பந்து வீச்​சில் நூவான் துஷா​ர, துஷ்மந்த சமீர ஆகியோர் தொடக்க ஓவர்​களி​லும், வனிந்து ஹசரங்​க, அசலங்​க, தசன் ஷனக ஆகியோர் நடு ஓவர்​களி​லும் பலம் சேர்க்​கக்​கூடும்.

வங்​கதேச அணி​யானது சூப்​பர் 4 சுற்று வாய்ப்பை இலங்கை அணி​யின் தயவால் பெற்​றது. இலங்கை அணி தனது கடைசி லீக் ஆட்​டத்​தில் ஆப்​கானிஸ்​தான் அணியை வீழ்த்​தி​யதன் காரணமாகவே வங்​கதேச அணி சூப்​பர் சுற்​றில் நுழைந்​தது. ஒரு​வேளை இலங்கை அணி, ஆப்​கானிஸ்​தானிடம் தோல்வி அடைந்​திருந்​தால் வங்​கதேச அணி தொடரில் இருந்து வெளி​யேறி இருக்​கும்.

Related Articles

Latest Articles