பாறை புரண்டு வீட்டின் மீது விழுந்ததில் மூன்று பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு

காலியில் பாறையொன்று வீட்டின் மீது விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வெலிவத்தை விஜயானந்த மாவத்தையைச் சேர்ந்த 78 வயதுடைய அமரசேன விஜேசிங்க என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார்.

அவர் தனது வீட்டில் இருந்தபோது பாறையுடன் மண்சரிவு ஏற்பட்டு வீட்டின் சுவரை இடித்துத் தள்ளியுள்ளது. அதில் சிக்குண்டே இவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் குடும்பத்தைச் சேர்ந்த சிலர் அந்த சந்தர்ப்பத்தில் வீட்டில் இருந்ததாகவும் எனினும் அவர்களுக்கு எவ்விதமான பாதிப்புகளும் ஏற்படவில்லை

வீட்டுக்கு மேலாக இருக்கும் மலையில் சுமார் 15 அடி உயரத்தில் இருந்தே இந்த பாறை, புரண்டு வந்துள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது.

Related Articles

Latest Articles