பாலத்தையும், பாதையையும் புனரமைத்து தருமாறுகோரி போராட்டம்

சேதமடைந்துள்ள பாலத்தையும், ஒரு கிலோமீட்டர் தூர பிரதான வீதியையும் புனரமைத்து தருமாறு வலியுறுத்தி லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெயாவெல் தோட்ட தொழிலாளர்கள் இன்று திங்கட்கிழமை (08) காலை கவனயீர்ப்பு நடவடிக்கையில் ஈடுப்பட்டனர்.

கொட்டும் மழைக்கு மத்தியிலும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தலவாக்கலை-நுவரெலியா பிரதான வீதியில் இருந்து பெயாவெல் தோட்டத்திற்கு செல்லும் ஒரு கிலோமீட்டர் தூரமான பிரதான வீதி மக்கள் பாவனைக்கு அசௌகரியத்தை தரும் வகையில் குன்றும் குழியுமாக காணப்படுகிறது.

அதேபோல இவ் வீதியூடாக கடந்து செல்லக்கூடிய 300 அடி நீளமும் 2,1ஃ2 அடி அகலமும் கொண்ட இரும்பு பாலம் ஓட்டை விழுந்து போக்குவரத்து அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் இவ் வீதி ஊடாகவும் பாலத்தினூடாகவும் பயணிக்கும் பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் இந்த விடயம் குறித்து அரசியல்வாதிகள், பிரதேச செயலாளர்,அபிவிருத்தி அதிகாரிகள் என பலரின் கவனத்திற்கு கொண்டுவந்தும் அவர்கள் கண்டும் காணாததும் போல் இருக்கின்றனர்.

ஆகையால் மக்கள் ஆகிய நாங்கள் இன்று காட்டும் மழையில் வீதிக்கு இறங்கி கவன ஈர்ப்பு நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ளோம்.

எனவே எமது நிலையை உணர்ந்தும் எதிர்கால கனவுகளை சுமந்து இவ் வீதி மற்றும் பாலத்தின் பயணிக்கும் பாடசாலை மாணவர்களின் நன்மை கருதி அரசு காலம் தாழ்த்தாது வசதியையும்,பாலத்தையும் புனரமைத்து தருமாறு கோரிக்கையை மக்கள் முன்வைத்துள்ளனர்.

-ஆ.ரமேஸ்-

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles