பாலஸ்தீனம்மீதான தாக்குதலை நிறுத்த வலியுறுத்தியும், பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவு தெரிவித்தும் யாழில் இன்று போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
யாழ்ப்பாண அனைத்து பள்ளிவாசல்களின் சம்மேளனத்தின் ஏற்பாட்டில், யாழ். ஐந்து சந்திப் பகுதியில் இன்று மதியம் இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
” இஸ்ரேலே… மிலேச்சதனமான தாக்குதலை உடன் நிறுத்து, சர்வதேச சட்டங்கள் இஸ்ரேலுக்கு பொருந்தாதா, பாலஸ்தீனத்தை அழிக்க சர்வதேசமே துணைபோகாதே, அமெரிக்கா- இஸ்ரேல் இரத்தக் களரி போரை வன்மையாக கண்டிக்கிறோம்” உள்ளிட்ட வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளைத் தாங்கியவாறு, கோஷ்ங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.










