பாலஸ்தீன மக்களின் உரிமைகளுக்காக இலங்கை தொடர்ந்து குரல் கொடுக்கும் என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
காசாவில் இருந்து பாலஸ்தீனர்களை வெளியேற்றிவிட்டு, அப்பகுதி கைப்பற்றப்படும் என அமெரிக்க ஜனாதிபதி கூறியுள்ள விடயம் தொடர்பில் இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாடு என்னவென்று எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்திருக்கின்றார்.
” பாலஸ்தீன மக்களின் உரிமைகள், வாழும் உரிமை என்பவற்றுக்காக நாம் தொடர்ந்து முன்னிலையாவோம்.
அமெரிக்க ஜனாதிபதியின் அறிவிப்புகள் தொடர்பில் தற்போதைய சூழ்நிலையில் நான் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை தெரிவிக்கப்போவதில்லை. ஏனெனில் அது பற்றி அரசாங்கம் கலந்துரையாடப்படவில்லை.
தேவையேற்படின் எதிர்காலத்தில் அது பற்றி அறிவிக்கப்படும்.” – எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
