பாலியல் வன்புணர்வு சம்பவங்கள் அதிகரிப்பு

இந்த வருடத்தின் முதல் ஒன்பது மாதங்களுக்குள் பெண்கள் மீதான பாலியல் வன்புணர்வுகள் மற்றும் சிறுவர்கள் மீதான துஷ்பிரயோகங்கள் உட்பட சுமார் 1,500 பாலியல் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது கடந்த ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களுடன் ஒப்பிடும்போது பாரிய அதிகரிப்பாகும்.

இந்த ஆண்டு செப்டம்பர் 30 ஆம் திகதி வரை, ஒப்புதல் மற்றும் ஒப்புதல் அற்ற பலாத்கார நிலையில் இந்த பாலியல் வன்புணர்வுகள் இடம்பெற்றுள்ளன. இதில் 273 வன்புணர்வுகள் இளம் வயதினருடன் தொடர்புடையவையாகும். எனினும் கடந்த வருடத்தில் 1382 பாலியல் வன்புணர்வு சம்பவங்கள் பதிவாகின.இதில்,சிறுவர்கள் தொடர்புடைய முறைப்பாடுகள் 250 ஆகும் .

இதேவேளை ஒப்புதலுடன் இடம்பெற்ற பாலியல் செயற்பாடுகள் பெரும்பாலானவை காதல் விவகாரங்களுடன் தொடர்புடையவை.

எனினும் பாதிக்கப்பட்ட பெண்கள் 16 வயதுக்குட்பட்டவர்கள் என்பதால் இது பாலியல் வன்புணர்வுகளாகவே கருதப்படுகின்றன.

இலங்கையின் தண்டனைச் சட்டத்தின் 363வது பிரிவின்படி, 16 வயதுக்குட்பட்ட ஒரு பெண்ணுடன் (அவளுடைய ஒப்புதலுடன் அல்லது இல்லாமல்) உடலுறவு கொள்வது சட்டப்பூர்வ பாலியல் வன்புணர்வுக்கு சமமாகும் என்று பொலிஸ் பேச்சாளர் குறிப்பிட்டார்.

Related Articles

Latest Articles