பால்மா, சமையல் எரிவாயு, கோதுமை மா மற்றும் சீமெந்து ஆகியவற்றின் விலைகளை அதிகரிப்பதற்கு வாழ்க்கைச்செலவு தொடர்பான உப குழு பரிந்துரை முன்வைத்துள்ளது.
வாழ்க்கைச்செலவு தொடர்பான அமைச்சரவை உப குழுக்கூட்டம் பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையில் நேற்று நடைபெற்றது. இதன்போதே விலை அதிகரிப்புக்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

இதன்படி ஒரு கிலோ பால்மாவின் விலை 200 ரூபாவாலும், 12.5 எடையுடைய சமையல் எரிவாயுவின் விலை 550 ரூபாவாலும், ஒரு கிலோ கோதுமை மாவின் விலை 10 ரூபாவாலும், சீமெந்து மூடையொன்றின் விலை 50 ரூபாவாலும் அதிகரிப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது. எனினும், திங்கட்கிழமை நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தின்போதே இது தொடர்பில் இறுதி முடிவு எடுக்கப்படவுள்ளது.