” பௌத்த தேரர்களை பகைத்துக்கொண்டு இலங்கையில் எதையும் செய்ய முடியாது. சிங்கள பௌத்த சக்திகளும், பிக்குகளும் எதிர்க்கும் விடயத்தை நிறைவேற்றவும் முடியாது. 13 விடயத்துக்கும் இது பொருந்தும்.” – என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
எனவே, கடும்போக்கை கைவிட:டு வடக்கு அரசியல் தலைவர்கள், நடுநிலை நோக்கி நகர வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.
ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரை தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மைத்திரிபால சிறிசேன இவ்வாறு கூறினார்.
அத்துடன், தான் ஜனாதிபதியாக இருந்தபோது வடக்கில் 95 சதவீத காணிகளை விடுவித்ததாக தெரிவித்த மைத்திரி, மாவட்ட அபிவிருத்தி சபை முறைமை உருவாக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
