50 ஆண்டு கால இரும்புப் பாலம் துருப்பிடித்து சேதம்: உயிர் அச்சத்துடன் பயணிக்கும் மக்கள்!

#பெயாவெல் தோட்டம்

50 ஆண்டு கால இரும்புப் பாலம் துருப்பிடித்து சேதம்: உயிர் அச்சத்துடன் பயணிக்கும் மக்கள்!

மக்களின் அன்றாட தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கு பாதுகாப்பான போக்குவரத்து வசதி இன்றியமையாததாகும்.

ஆனால் மலையகப் பகுதிகளில் வாழும் மக்கள் இன்றும் அடிப்படை போக்குவரத்து வசதிகளின்றி பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

குறிப்பாக, பல தசாப்தங்களுக்கு முன்பு அமைக்கப்பட்ட பாதைகள் மற்றும் பாலங்கள் போதிய பராமரிப்பின்றி பழுதடைந்த நிலையில் காணப்படுவது மக்களின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது.

அரசாங்கங்கள் மாறி மாறி ஆட்சிக்கு வந்தபோதிலும், மலையக மக்களின் அடிப்படை அபிவிருத்தித் தேவைகள் இன்னும் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வருகிறது.

தேர்தல் காலங்களில் வாக்குகளைப் பெறும் கருவிகளாக மட்டுமே பெருந்தோட்ட மக்கள் பயன்படுத்தப்படுகின்றார்களோ என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வு கோரி பலமுறை ஆர்ப்பாட்டங்கள், கவனயீர்ப்புப் போராட்டங்கள் மற்றும் மகஜர்கள் கையளிக்கப்பட்ட போதிலும், நிலையான தீர்வுகள் கிடைக்காத நிலை தொடர்கிறது.

இந்த நிலையில், தலவாக்கலை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பெயாவெல் தோட்டத்திற்கு செல்லும் பிரதான பாதையில் அமைந்துள்ள பாலம் குறித்து மக்கள் கடும் கவலை வெளியிட்டுள்ளனர்.

சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்னர் இரும்பினால் அமைக்கப்பட்ட இந்தப் பாலமே அத்தோட்ட மக்களுக்கு ஆற்றைக் கடந்து வெளி உலகத்துடன் தொடர்பு கொள்ளும் ஒரே வழியாக உள்ளது.

சுமார் 60 அடி நீளமும் நான்கு அடி அகலமும் கொண்ட இந்தப் பாலத்தின் ஊடாக முச்சக்கர வண்டிகளைத் தவிர வேறு எந்த வாகனங்களும் செல்ல முடியாத நிலை காணப்படுகிறது.

நாள்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்தப் பாலத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

வைத்தியசாலைகளுக்கு செல்வோர், பாடசாலை மாணவர்கள், தொழிலாளர்கள் மற்றும் அன்றாட தேவைகளுக்காகப் பயணிக்கும் பொதுமக்கள் அனைவரும் இந்தப் பாலத்தையே நம்பியுள்ளனர்.

பெயாவெல் தோட்டத்தைச் சேர்ந்த 350-க்கும் மேற்பட்ட குடும்பங்களின் 1,200-க்கும் அதிகமான மக்கள் இப்பாலத்தை பயன்படுத்தி வருகின்றனர். மேலும் ரட்ணகிரி, நானுஓயா மற்றும் பாமஸ்டன் தோட்ட மக்களும் தங்களது போக்குவரத்து தேவைகளுக்காக இந்தப் பாலத்தை நம்பியுள்ளனர்.

ஆனால், அரை நூற்றாண்டைக் கடந்துள்ள இந்தப் பாலம் தற்போது மிகவும் ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. பாலத்தில் பொருத்தப்பட்டுள்ள இரும்புக் கட்டமைப்புகள் பல இடங்களில் துருப்பிடித்து சேதமடைந்துள்ளன.

அதேவேளை, பாலத்தின் நடுப்பகுதியில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளதுடன், பல இடங்களில் ஓட்டைகளும் உருவாகியுள்ளன. இதனால் பாலத்தை பயன்படுத்தும் மக்கள் தினமும் உயிர் அச்சத்துடன் பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles