காட்டு யானை தாக்கி குடும்பஸ்தர் பலி: பூனாகலை பகுதியில் சோகம்

ஹல்துமுல்ல பிரதேச சபைக்குட்பட்ட பூனாகலை, மக்கள்தெனிய பகுதியில் காட்டு யானை தாக்குதலுக்கு இலக்காகி குடும்பஸ்தர் ஒருவர் இன்று (14) பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

கொஸ்லாந்தையைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான மூக்கன் ரெங்கசாமி (வயது 56) என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.

இவர் மக்கள்தெனிய பகுதியில் அமைந்துள்ள தென்னந்தோட்டம் ஒன்றில் காவலாளியாகப் பணியாற்றி வந்துள்ளார்.

வழமை போல் இன்று காவல் பணியில் ஈடுபட்டிருந்த வேளையிலேயே, தோட்டத்திற்குள் புகுந்த காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகிச் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தகவல் – ராமேஸ்குமார் JP

Related Articles

Latest Articles