உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி சமீபத்தில் தொடங்கபட்டு விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது.
இதில் கலந்து கொண்ட 18 போட்டியாளர்களின் ஒருவரான நமிதா மாரிமுத்து, உடல்நல குறைவால் திடீரென அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்.
மேலும் அவர் வீட்டில் இருந்த நமிதா கூறிய கதை அனைவரின் கவனம் ஈர்த்த நிலையில், திடீரென அவர் வெளியேறினார்.
இந்நிலையில் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறிய நமிதா தற்போது, தெருவில் வசித்து வருபவர்களுக்கு உடைகளை வாங்கி கொடுத்து உதவி செய்துள்ளார். அந்த வீடியோ வெளியாகி இணையத்தில் பரவி வருகிறது.