‘பிரதமரை பதவி விலகுமாறு அழுத்தம் கொடுப்பது யார்’?

” பிரதமர் மஹிந்த ராஜபக்சவை பதவி விலகுமாறு அழுத்தம் கொடுக்கும் நபர் யார் என்பது கண்டறியப்பட வேண்டும். திரைக்கு பின்னாலிருந்து அறிவிப்புகளை விடுப்பதைவிட துணிவிருந்தால் இது தொடர்பில் நேரடியாக அறிவிக்கப்பட்டும். யார் எத்தகைய அழுத்தங்களை பிரயோகித்தாலும் பிரதமர் செல்லவேக்கூடாது.”

இவ்வாறு அபயராம விகாரையின் விகாராதிபதி முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்தார்.

அபயராம விகாரைக்கு நேற்று சென்றிருந்த பிரதமர் மஹிந்த ராஜபக்ச, தேரரை சந்தித்து ஆசிபெற்றார். பிரதமர் அங்கிருந்து சென்றதும் முருத்தெட்டுவே தேரர் ஊடக சந்திப்பொன்றை நடத்தினார். இதன்போது அவர் கூறியவை வருமாறு,

” பிரதமர் மஹிந்த ராஜபக்ச பதவி விலகிவிட்டாரென கதை கட்டுகின்றனர். அவர் இப்போதுதான் என்னை சந்தித்துவிட்டு சென்றார். பதவி விலகுமாறு ஜனாதிபதி கூறவில்லை. நாட்டு மக்களும் சொல்லவில்லை. அப்படியானால் பிரதமரை பதவி விலகுமாறு அழுத்தம் கொடுக்கும் நபர் யார் என்பது கண்டறியப்பட வேண்டும். ஒளிந்திருந்து செயலில் இறங்காது, துணிவிருந்தால் நேரில் வந்து இது பற்றி அறிவிக்குமாறு வலியுறுத்துகின்றேன்.

எவர் எத்தகைய அழுத்தங்களை பிரயோகித்தாலும் மஹிந்த செல்லக்கூடாது. அவர் பதவி விலகுவதாக இருந்தால் எமக்கு அறிவித்துவிட்டே செல்வார். அவர் பதவி விலக வேண்டிய தேவையும் இல்லை. அவர் பதவி விலகினால் நாட்டு மக்கள் அநாதரவாக்கப்படுவர்.” – என்றார்.

Related Articles

Latest Articles