பிரதமர் பதவியை இராஜினாமா செய்யத் தயார் – PMO நிராகரிப்பு

பிரதமர் தினேஷ் குணவர்தன தனது பதவியை இராஜினாமா செய்யத் திட்டமிட்டுள்ளதாக சில ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் கூறப்படும் கூற்றுக்களை பிரதமர் அலுவலகம் நிராகரித்துள்ளது.

பிரதமர் குணவர்தன தனது பதவியை இராஜினாமா செய்வதில் உண்மையில்லை என பிரதமரின் ஊடக செயலாளர் லலித் ரோஹன லியனகே தெரிவித்துள்ளார்.

பிரதமர் தினேஷ் குணவர்தனவை அப்பதவியில் இருந்து நீக்கி மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சன்ன ஜயசுமண நேற்று தெரிவித்ததையடுத்து இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று இந்த நடவடிக்கைக்கு சுதந்திர மக்கள் கூட்டமைப்பிடம் ஆதரவை கோரியுள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் ஜயசுமண குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், பிரதமர் தினேஷ் குணவர்தன தனது பதவியை இராஜினாமா செய்யுமாறு எந்தவொரு தரப்பினராலும் கோரப்படவில்லை அல்லது தாக்கம் செலுத்தப்படவில்லை என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டத்தை சீர்குலைக்கும் வகையில் இந்த கோரிக்கைகள் முன்வைக்கப்படுவதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Related Articles

Latest Articles