பிரதமர் மோடிக்கு அனுப்படும் ஆவணத்தில் மலையக்கட்சிகள் கையொப்பமிடவில்லை!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் ஒப்படைப்பதற்காகத் தமிழ் பேசும் தரப்புகளின் பொது நிலைப்பாட்டைப் பிரதிபலிக்கும் ஆவணம் ஒன்றில் வடக்கு, கிழக்கு தமிழர்களின் கட்சிகள் இன்று ஒப்பமிட்டன.

கடந்த 21 ஆம் திகதி இறுதி செய்யப்பட்ட ஆவணத்தில் சம்பந்தன் உட்பட பல தலைவர்களும் இன்று கையொப்பமிட்டனர். அந்த ஆவணம்விரைவில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.

குறித்த ஆவணத்தில் இரா. சம்பந்தன், நீதியரசர் சிவீ விக்னேஸ்வரன், சுரேஸ் பிரேமச்சந்திரன், ஶ்ரீகாந்தா, செல்வம் அடைக்கலநாதன்,சித்தார்த்தன் ஆகியோர் கையொப்பமிட்டனர். மாவை சேனாதிராஜாவும் கையொப்பமிடவுள்ளார்.

தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், இரா. சம்பந்தனை அவரது இல்லத்தில் இன்று சந்தித்தார். அவரதுதரப்பினதும், முஸ்லிம் தரப்பினதும் பிரச்சினைகளைப் புரிந்துகொண்டு அவர்களின் பங்களிப்பு இல்லாமலேயேபொது ஆவணத்தை பிரதமர் மோடிக்கு அனுப்புவதற்கு மனோவிடம் நேரிலும், ஹக்கீமுக்கு தொலைபேசியிலும் சம்பந்தன் தெரியப்டுத்தியுள்ளார்.

இதன்படி சம்பந்தன் தலைமையில் தமிழ்த் தேசியக் கட்சிகள், விரைவில் இந்தியத் தூதுவரை சந்தித்து ஆவணத்தை கையளிக்கவுள்ளன.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles