பிரதமர் மோடி, ஜனாதிபதி ட்ரம்ப் 13 ஆம் திகதி சந்திப்பு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்பை, இந்திய பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் 13 ஆம் திகதி சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

கடந்த மாதம் 20-ம் திகதி அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றார்.

இந்நிலையில் கடந்த 27-ம் திகதி இரு தலைவர்களும் தொலைபேசியில் முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்த சூழலில் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் எதிர்வரும் 10 மற்றும் 11 ஆம் திகதிகளில் நடைபெறும் செயற்கை நுண்ணறிவு மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார்.

அங் கிருந்து 12 ஆம் திகதி அவர் அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் செல்கிறார். 13-ம் திகதி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை, பிரதமர் மோடி சந்தித்துப் பேசஉள்ளார்.
இந்த சந்திப்பு சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Related Articles

Latest Articles