ஜனாதிபதியின் செலவினங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் 53 வீதத்தை தனது தனிப்பட்ட ஊழியர்களுக்காக பயன்படுத்தியதாகவும், அதற்கு பதிலாக தேசிய மட்டத்தில் பாரிய திட்டங்களுக்கு செலவிட்டதாகவும் வெளியான செய்திகளை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று மறுத்துள்ளார்.
“எனக்கும் எனது முன்னோடியான மகிந்த ராஜபக்சவும் எமது தனிப்பட்ட ஊழியர்களுக்காக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் செலவிட்ட செலவுகள் குறித்த விபரங்களைக் கோரிய மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தின் தலைவர் லயனல் குருகேவை மேற்கோள் காட்டி பல அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்கள் என்னைத் தாக்கத் தொடங்கியுள்ளன. எவ்வாறாயினும், அவருக்கு தகவல் வழங்கியவர்கள் தவறான தகவல்களை வழங்கியுள்ளனர்,” என பாராளுமன்ற உறுப்பினர் சிறிசேன தெரிவித்தார்.
“எனக்காக ஒதுக்கப்பட்ட நிதியை தேசிய அளவிலான முக்கிய திட்டங்களுக்கு செலவு செய்துள்ளேன். இதில் கிராம சக்தி திட்டம், சிறுநீரக நோய் தடுப்பு திட்டம் மற்றும் போதைப்பொருள் தடுப்பு திட்டம் ஆகியவை அடங்கும். போதைப்பொருள் தொடர்பான குற்றங்களில் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்ட சிலருக்கு மரண தண்டனை விதிக்க ஆவணங்களில் கையெழுத்திட்டேன். அந்த காலப்பகுதியில் இவர்களுக்கு மரண தண்டனை வழங்க அனுமதித்திருந்தால் போதைப்பொருள் விவகாரம் இன்று பாரதூரமானதாக இருந்திருக்காது.மேலும் நான் ஸ்மார்ட் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் பிரதேச செயலர்களுக்கு 1000 மடிக்கணினிகள் வழங்கிவைத்தேன்.
“இந்த ஊடக நிறுவனங்கள் தங்கள் அறிக்கைகளை சரிசெய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்,” என்றும் அவர் கூறினார்










