‘பிரபாகரன்’ பற்றி டக்ளஸ் வெளியிட்ட கருத்துக்கு சபையில் பதிலடி

” எங்களுடைய தேசத்தின் தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் காலத்தில் போதைப்பொருள் வியாபாரம் நடந்ததாக கூறிய அமைச்சர் டக்ளஸின் கூற்றை வன்மையாகக் கண்டிக்கின்றேன். அந்ததக் கருத்தை நிராகரிக்கின்றேன்.” இவ்வாறு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய அவர், இது தொடர்பில் மேலும் கூறியவை வருமாறு,

” போதைப்பொருளால் வடக்கு, கிழக்கில் எமது சமூகம் மிகவும் மோசமாக பாதிக்கப்படுவது தொடர்பில் சிறிதரன் எம்.பி. கருத்து வெளியிடுகையில், அந்த உண்மையை சகித்துக்கொள்ள முடியாத இராணுவ துணைக்குழுவின் தலைவர், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பொய்யான கருத்தை முன்வைத்தார்.

எங்களுடைய தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் காலத்தில் போதைப்பொருள் வியாபாரம் நடந்ததாக கூறுகிறார்.
இதனை மறுக்கின்றேன். பிரபாகரனின் ஒழுக்கம் தொடர்பில் சரத்பொன்சேகா, கமல் குணரட்னம் போன்றவர்களே தெளிவாக கூறியுள்ளனர். எனவே, அவர்களிடம் கேட்டாவது டக்ளஸ் கற்றுக்கொள்ள வேண்டும்.” – என்றார்.

செல்வராசா, எம்.பி. பிரபாகரனை தேசியத்தலைவர் என குறிப்பிட்டதால் அதற்கு ஆளுங்கட்சியின் எதிர்ப்பை வெளியிட்டனர்.

Related Articles

Latest Articles