பிரிந்தய குமாருக்கு மக்கள் அஞ்சலி – நாளை இறுதிக்கிரியை

பாகிஸ்தானில் வைத்து மிகவும் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட இலங்கையரான பிரியந்த குமாரவின்  இறுதிக்கிரியைகள் நாளை (08) இடம்பெறவுள்ளன.

பாகிஸ்தானிலிருந்து பிரியந்த குமாரவின்  உடற் பாகங்கள் நேற்று (06) மாலை கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு கொண்டுவரப்பட்டன.
நீர்க்கொழும்பு வைத்தியசாலையில் இடம்பெற்ற மரண பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது.

அன்னாரது பூதவுடல் அவரது கனேமுல்ல பகுதியிலுள்ள வீட்டிற்கு இன்று (07) அதிகாலை 3 மணியளவில் கொண்டு வரப்பட்டு, மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இறுதிக்கிரியை நாளை நடைபெறவுள்ளது.

Related Articles

Latest Articles